மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2021ம் ஆண்டு தொடரப்பட்ட போக்சோ வழக்கில் (06/2021) உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் முக்கிய குற்றவாளியான சுப்பிரமணியன் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத்தந்த காவல் துறையினரை மாநகர காவல் சார்பாக, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.