மதுரை: அனைவரும் வருக.. தமிழகம் வெல்க.. கமல்ஹாசன் பேட்டி

712பார்த்தது
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மதுரையில் இன்று (பிப். 21) மாலை நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு, "எத்தனை தொகுதிகள் என்று சொல்ல முடியாது. எப்படியும் நாங்கள் வெளியிடுவோம். முக்கியமான விஷயம் கூட்டணியில் ஒற்றுமையும் நோக்கமும் தான் அது எங்களுக்கு தெளிவாக உள்ளது. அதனால் நாங்கள் அதை நோக்கி நகர்கிறோம்" என்று பதிலளித்தார். ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாக வரும் தகவல் குறித்து கேட்டபோது, "அனைவரும் வருக தமிழக வெல்க" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி