மதுரை சிந்தாமணி பகுதியில் திமுக இளைஞரணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். மகளிர் உரிமைத் தொகை ₹5000 வழங்குவது தேர்தல் வாக்குறுதி அல்ல என்றும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வர வாய்ப்புள்ளதால், பாஜக மற்றும் அதிமுக இதனை நிறுத்த முயற்சிப்பார்கள் என்றும் அவர் கூறினார். இதனை முறியடிக்கும் வகையில், மத்திய பிரதேசத்தில் நடந்ததைப் போல இங்கு நடக்காமல் இருக்க தலைவர் (மு.க. ஸ்டாலின்) முன்கூட்டியே இந்த திட்டத்தை அறிவித்துள்ளார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.