மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் பிப். 12 அன்று நடைபெற்ற மாணவர்களுக்கான 3 நாள் சதுரங்கப் பயிற்சி முகாமினை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தொடர் பயிற்சி மற்றும் புதிய முயற்சிகள் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சதுரங்க விளையாட்டில் எதிராளியின் நகர்வுகளை குறுகிய நேரத்தில் புரிந்து செயல்பட்டு வெற்றி அடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.