உசிலம்பட்டியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கும் அவலம்

1பார்த்தது
உசிலம்பட்டியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கும் அவலம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பட்டாசு வெடிக்க தடை உத்தரவு இருந்தும், இல்ல விழாக்களின் போது ஊர்வலங்களில் பட்டாசு வெடித்து விபத்துகள் ஏற்படுவது தொடர்கிறது. நேற்று (ஜூன் 3) பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இல்ல விழாவிற்கு பட்டாசு வெடித்தவாறு ஊர்வலமாக சென்றபோது, சாலையோரம் இருந்த குப்பையில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, ஆள் உயரத்திற்கு எரிந்த தீயால் மின்சார டிரான்ஸ்பார்மருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் மற்றும் நகராட்சியினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி