மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள பி.தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சௌண்டப்பன் மகன் ஞானமணி (43) என்பவர் கூடலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவர், சனிக்கிழமை வீட்டில் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இவரை உறவினர்கள் மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பேரையூர் போலீஸார வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.