மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நேற்று (மே. 14) உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகள் உட்பட 30க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை உசிலம்பட்டி டிஎஸ்பி ஷண்முகசுந்தரன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் கார்மேகம், உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சுகந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.