தமிழகத்தில் தொலைந்துபோன செல்போன்களை விரைவாகப் பதிவு செய்து மீட்டுக்கொடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த மதுரை உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு, சைபர்கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபி டாக்டர். சந்தீப் மித்தல், ஐபிஎஸ் அவர்கள், இந்திய அரசு சார்பில் DOT-CEIR சிறந்த செயல்பாட்டுக்கான விருதை வழங்கி பாராட்டினார். இந்த விருதை மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் சைபர் க்ரைம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் உசிலம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர் ராம்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த சாதனை காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டிற்கு ஒரு சான்றாகும்.