மதுரை: சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல்.

5பார்த்தது
மதுரை உசிலம்பட்டியில் 200க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி பொருட்களை ஏற்றி இறக்கி வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொங்கபட்டி கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனம், சிமெண்ட் மூடைகளை இறக்கி ஏற்றுவதற்கு உள்ளூர் தொழிலாளர்களைப் புறக்கணித்துவிட்டு வடமாநில தொழிலாளர்களைப் பணியமர்த்தியதாகக் கூறி, நேற்று (டிச. 2) சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-தேனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி