மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், மேதகு பிரபாகரனின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (நவ. 26) மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் தலைமையில் இனிப்பு வழங்கி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குருதிக் கொடை வழங்கினர்.