மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் கருப்புத்தேவர் கறிக்கடை அருகில் நேற்று (ஜூன் 5) நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருமங்கலம் தாலுக்கா எ கொக்குளம் கிராம நிர்வாக அதிகாரி கவிதா சென்று பார்த்த பின்பு செக்கானூரணி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எப்படி இறந்தார் என்பது குறித்த விசாரணையை செக்கானூரணி போலீசார் நடத்தி வருகின்றனர்.