மதுரை: கடித்த பாம்பை கொன்று மருத்துவமனைக்கு வந்த பெண்

62பார்த்தது
மதுரை: கடித்த பாம்பை கொன்று மருத்துவமனைக்கு வந்த பெண்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்கானூரணி அருகே உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் (48) என்பவர் இன்று (ஜூலை 31) காலை 9 மணி அளவில் வீட்டிலுள்ள மாட்டுக்குத் தேவையான தீவனத்தை எடுக்கச் சென்றபோது அங்கே எதிர்பாராத விதமாக சாரைப்பாம்பு அவரது வலது கை விரலைத் தீண்டியது. 

இதை அறிந்த அவரது சகோதரர் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றுவிட்டு சாக்கில் எடுத்துக்கொண்டு சகோதரியை அருகே உள்ள செக்கானூரணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து விட்டு அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். 

கடித்த பாம்பைக் கொன்று சாக்குடன் மருத்துவமனைக்கு வந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

தொடர்புடைய செய்தி