உசிலம்பட்டி: கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

1207பார்த்தது
உசிலம்பட்டி: கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தப்பநாயக்கனூர் ஊராட்சியில் உள்ள பழம்பெரும் சிவன் கோயிலுக்கு மேற்கூரை அமைத்து தரக்கோரி கோயில் நிர்வாகிகளும் பொதுமக்களும் எம்எல்ஏயிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ அய்யப்பன், தனது சொந்த செலவில் ரூபாய் 1 லட்சம் மதிப்பீட்டில் கோயிலுக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்தார். மேலும், கோயில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி