மதுரை: சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி

59பார்த்தது
மதுரை: சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி
மதுரை மாவட்டம் பேரையூர் சாப்டூர் சுந்தர்ராஜ் மகன் அழகுராஜா(27) என்பவர் பேரையூரில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் பணிமுடிந்து இரவு சாப்டூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது வெள்ளைக்கண் பாலம் அருகே ரோட்டில் பரப்பி வைத்திருந்த துவரை செடிகள் இருசக்கர வாகனத்தை வழுக்கி விட்டது. இதனால் கீழே விழுந்த அழகுராஜா உயிரிழந்தார். இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி