மதுரை உசிலம்பட்டி அருகே நாட்டாபட்டியில் வசிக்கும் 70 வயதான நாகம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது, முகத்தை துணியால் மறைத்த பெண் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, அவரிடம் இருந்த ஐந்தே கால் பவுன் தங்க நகையை பறித்துச் சென்றார். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், திருடியது
சங்கீதா(30) என்பது தெரியவந்தது. குடும்பத்தில் பணப் பிரச்சனையை சமாளிக்க இந்த திருட்டில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.