மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சதீஷ் குமார் (41) மற்றும் சுசீந்திரன் (49) ஆகிய இருவரை காவல்துறையினர் நேற்று (18.05.2026) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.