மதுரை உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன. 9) சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறந்தும் நீர் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டதால், அடுத்த முறை அணை நிரம்பும்போது ஆய்வு செய்து முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், உசிலம்பட்டி கண்மாயில் நகராட்சி சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், நாய் தொல்லைகளை சரி செய்யவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.