தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்து, கொங்கபட்டி அருகே தனியார் பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. நேற்று மதியம் நடந்த இந்த விபத்தில், பள்ளி வேன் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளி வேனில் யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பள்ளி வேன் ஓட்டுநர் ஜேசுராஜுக்கு காயம் ஏற்பட்டது. அரசு பேருந்து ஓட்டுநர் சவுந்திரபாண்டி மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து மதுரை ரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.