உசிலம்பட்டி: நாய் குறுக்கே வந்ததால் டூவீலரில் சென்றவர் பலி.

65பார்த்தது
உசிலம்பட்டி: நாய் குறுக்கே வந்ததால் டூவீலரில் சென்றவர் பலி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யனம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கருத்த கண்ணனின் மகன் சசிகுமார் (40) என்பவர் கடந்த 17ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பாசக்காரன்பட்டி உசிலம்பட்டி சாலையில் சின்ன கருப்பு கோவில் அருகே சென்று சென்று கொண்டிருந்த போது குறுக்கே நாய் ஒன்று வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 இந்நிலையில் நேற்று (மார்ச் 25) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாண்டியம்மாள் உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி