உசிலம்பட்டி: பூச்சி மருந்து சாப்பிட்டு வாலிபர் தற்கொலை

68பார்த்தது
உசிலம்பட்டி: பூச்சி மருந்து சாப்பிட்டு வாலிபர் தற்கொலை
மதுரை மாவட்டம் பேரையூர் எம் அய்யம்பட்டி கிழக்கு தெருவில் வசிக்கும் பவுன்ராஜ் மகன் வசந்தகுமார்( 22) என்பவர் அக்னி ராணுவம் பயிற்சி அகாடமியில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார். வசந்த குமார் பயிற்சி வகுப்புக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் இவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் வசந்தகுமார் மன விரக்தியில் பூச்சி மருந்து சாப்பிட்டு கடந்த (மார்ச். 10) மதியம் வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச். 15) மதியம் உயிரிழந்தார். இது குறித்து எம் கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி