உசிலம்பட்டி: வாகன விபத்தில் விவசாயி பலி

77பார்த்தது
உசிலம்பட்டி: வாகன விபத்தில் விவசாயி பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் மேற்குத் தெருவைச் சேர்ந்த வீரணன் (65) என்ற விவசாயி தனது தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு (ஜூன். 3) உசிலம்பட்டி - தேனி சாலையில் குப்பணம்பட்டி மயானம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த கார், இரு சக்கர வாகனம்மீது மோதியதில் பலத்த காயமடைந்த வீரணனை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுதொடர்பாக, கார் ஓட்டுநரான தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் மீது உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி