உசிலம்பட்டி: விவசாயிகளின் வீரவணக்க ஊர்வலம்

70பார்த்தது
உசிலம்பட்டி: விவசாயிகளின் வீரவணக்க ஊர்வலம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உழவர் தினத்தை முன்னிட்டு விவசாய போராட்டங்களில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நேற்று (ஜூலை 5) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க ஊர்வலம் நடைபெற்றது. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதரவிலை, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முடியாத அளவில் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் களை இறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

தொடர்புடைய செய்தி