மதுரை மாவட்டம், சேடப்பட்டி அருகே அத்திப்பட்டி கிராமத்தில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடக மேடையை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தங்க தமிழ் செல்வன் எம். பி ஆகியோர் இணைந்து நேற்று (நவ. 4) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். மேலும், அத்திபட்டியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமையும் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.