உசிலம்பட்டி: சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி பலி

1091பார்த்தது
உசிலம்பட்டி: சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி பலி
மதுரை-தேனி சாலையில் முண்டுவேலம்பட்டி விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, கால்நடைகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயக்காள் (50) மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செக்கானூரணி போலீஸார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.