மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கரையம்பட்டியில் வசிக்கும் மகேஸ்வரன் என்பவரின் மனைவி சுகன்யா (26) என்பவர் வெள்ளிக்கிழமை (செப்.27) வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.
எனவே நேற்று(செப்.28) உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்கள்.