சாலை விபத்தில் வாலிபர் பலி.

0பார்த்தது
சாலை விபத்தில் வாலிபர் பலி.
மதுரை அருகே போத்தம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் (22) என்பவர் கல்லுாரி படிப்பை முடித்திருந்தார். இதே ஊரைச் சேர்ந்த விஜயராமன் (25) என்பவர் வட மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் மகாசிவராத்திரி வழிபாட்டுக்கு ஊருக்கு வந்துள்ளார். இருவரும் நேற்று (பிப். 17) உசிலம்பட்டிக்கு வந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் மாசிப்பெட்டி திரும்பும் நிகழ்ச்சியை பார்த்து விட்டு இரவு இருசக்கர வாகனத்தில் பேரையூர் ரோட்டில் போத்தம்பட்டி விலக்கு அருகே வந்த போது எதிரே உசிலம்பட்டியை நோக்கி வந்த லோடு வேன் மோதியதில் சஞ்சய் சம்பவ இடத்தில் பலியானார். விஜயராமன் படுகாயம் அடைந்தார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி