கோவை மற்றும் மதுரை மத்திய சிறைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை குறித்து தமிழக இடைக்கால பட்ஜெட் 2026-27-ல் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவை மத்திய சிறையை மாற்ற ரூ.327 கோடியில் பணிகள் நடந்து வருவதாகவும், மதுரை மத்திய சிறையை மாற்ற ரூ.229 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் கூறினார்.