திருச்செந்தூரில் மகா சிவராத்திரி: பக்தர்கள் குவிந்தனர்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (பிப்., 15) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பரிகாரத் தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
