மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்த நாள் இன்று (அக்.2) கொண்டாடப்படுகிறது. இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள 'வீ ஆர் தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர்
அண்ணாமலை, ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி, நேர்மை, பணிவு, எளிமை மற்றும் தன்னலமற்ற சேவையை தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் காந்தியடிகள் என்று தெரிவித்துள்ளார். மேலும், அண்ணல் காந்தியின் தியாகமும் தேசபக்தியும் என்றும் நமக்கு சிறந்த வழிகாட்டியாகும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.