தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 1994ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், சிபிஐ, சிபிசிஐடியில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் தூத்துக்குடி, தேனி, மாவட்ட எஸ்.பி., சென்னை, மதுரை மாநகர காவல் ஆணையராகவும் இருந்துள்ளார். இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு டிஜிபியாக தொடர்வார். முன்னதாக தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் டிஜிபியாக சந்தீப்ராய் ரத்தோரை நியமித்திருந்தது. அவர் வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.