ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பெரும் தீ விபத்து (காணொளி)

305பார்த்தது
ராஜ்தானி எக்ஸ்பிரஸில் இன்று (மே 17) பெரும் தீ விபத்து ஏற்பட்டது. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து கோட்டா அருகே உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் நோக்கிச் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸின் (எண் 12431) பி1 பெட்டி மற்றும் என்ஜின் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை முன்கூட்டியே கண்டறிந்த பணியாளர்கள், உடனடியாக ரயிலை நிறுத்தி, பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றி, ஒரு பெரும் விபத்தைத் தடுத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.