அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது தான் செய்த தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் திண்டிவனத்தில் இன்று (நவ., 06) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் சில தவறுகளை நான் செய்ததுண்டு. நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது. மற்றோரு தவறு கட்சி தலைவர் பதவியை கொடுத்தது. அன்புமணியில் பேச்சும் செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளது என்று தெரிவித்தார்.