மோகன்லாலின் முதல் படமான 'திரநோட்டம்' படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் நடித்த வழக்கறிஞர் கே.பி. கோபகுமார் (73) இன்று (பிப்.26) காலமானார். அவருக்கு வயது 73. இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் ரவி பிள்ளையின் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். இந்நிலையில், சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கோபகுமார் இன்று காலமானார். அவருக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.