ஹோட்டல் ஊழியர் அத்துமீறல்: மலையாள நடிகை அதிர்ச்சி

5690பார்த்தது
ஹோட்டல் ஊழியர் அத்துமீறல்: மலையாள நடிகை அதிர்ச்சி
மலையாள நடிகையிடம் ஹோட்டல் ஊழியர் அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த 26 வயது இளம் மலையாள நடிகையிடம், இன்டர்காம் சரி செய்ய வந்த ஊழியர் அத்துமீற முயன்றுள்ளார். அந்த ஊழியர் 'கட்டிப்பிடிக்கலாமா?' என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். நடிகை புகார் மனு அளிக்க விரும்பாததால், போலீசார் ஊழியரிடம் இனி இதுபோல் நடக்கக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

தொடர்புடைய செய்தி