பனையூரில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம்

3300பார்த்தது
பனையூரில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம்
சென்னையை அடுத்த கானத்தூர் அருகே பனையூர் பகுதியில் உள்ள காலி இடத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கானத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டாரா, இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி