மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'பிரம்மயுகம்'. ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை குவித்த இந்த படம், வரும் பிப்.12-ம் தேதி ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது. இதனால், மம்முட்டி ரசிகர்கள் மற்றும் மலையாள திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.