திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி காரில் வெளியூருக்கு கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சபரி (21) என்பவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமியை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக செயல்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி இளைஞரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார், கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.