தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அம்சவல்லி என்ற பெண்ணைக் கொலை செய்து, சடலத்துடன் 3 நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த அப்துல் ரகுமான் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். பணத்தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அம்சவல்லியைத் தாக்கி தலையில் கல்லைப் போட்டுக் கொன்று உடலை மூட்டை கட்டியுள்ளார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றி அவரைக் கைது செய்தனர்.