மயிலாடுதுறை கூறைநாட்டைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் மணிகண்டன் (45). இவர் 38 வயது திருமணமான பெண்ணுடன் 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். பெண் பேசுவதை தவிர்த்ததால், ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி, சில படங்களையும் பதிவிட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் மணிகண்டனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணிகண்டனுக்கு மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.