அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் சாந்தி, ஸ்ரீதேவி ஆகிய இரு பெண்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற வழக்கில் முத்து (60) என்ற முதியவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கணவரை இழந்த சாந்தியைத் தன்னுடன் வாழுமாறு முத்து வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். 70% தீக்காயங்களுடன் சாந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.