கேரள மாநிலம் கொல்லம் கொட்டாரக்கரை பகுதியில் உள்ள மதுபான கடையில், மது வாங்க வந்த ரஞ்சித், ஜிம்சன் ஆகியோர் கடை ஊழியர்கள் மற்றும் மது வாங்க வந்தவர்களை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதை கவனித்த ஃபைசல் என்ற ஊழியர், அவர்களின் செல்போனை தட்டி விட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித் மற்றும் ஜிம்சன், ஃபைசலின் தலையில் பீர் பாட்டிலை கொண்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து, தப்பியோடிய ரஞ்சித், ஜிம்சன் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.