தஞ்சாவூர் வாட்டாத்திக்கோட்டை அருகே கந்துவட்டி கொடுமையால் சரவணன் என்ற லேத் பட்டறை உரிமையாளர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவர் பெற்ற ரூ.2 லட்சம் கடனுக்கு, வட்டித்தொகையாக ரூ.10 லட்சம் கேட்டு கந்துவட்டி கும்பல் மிரட்டியுள்ளது. பணத்தைத் தராவிட்டால் கடையை எழுதித் தருமாறு மிரட்டியதால், மனமுடைந்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.