உ.பி., ஜான்சியில் எல்.ஐ.சி. மேம்பாட்டு அதிகாரி ரவீந்திர அஹிர்வார் (30) என்பவர் கிரிக்கெட் விளையாடச்சென்றுள்ளார். அப்போது அசௌகரியமாக உணர்ந்த அவர், தண்ணீர் குதித்துள்ளார். உடனே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவீந்திர அஹிர்வார் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறிய மருத்துவர், உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரிய வரும் என கூறியுள்ளார்.