சென்னை: குன்றத்தூர் அருகே சிக்கராயபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரன் (47), வலது கையில் ஏற்பட்ட எலும்பு வளர்ச்சிக்காக பூந்தமல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடலை பார்த்த குடும்பத்தினர் கழுத்தில் ஓட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.