நிதி நிறுவன ஊழியர்கள் கெடுபிடி தீக்குளித்த நபர் பலி

7பார்த்தது
நிதி நிறுவன ஊழியர்கள் கெடுபிடி தீக்குளித்த நபர் பலி
விழுப்புரம் பென்னைவளத்தைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர் அப்பாஸ், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று பொக்லைன் இயந்திரம் வாங்கிய நிலையில், தொழில் நஷ்டம் காரணமாக மீதமுள்ள தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். கடந்த 13ஆம் தேதி இயந்திரத்தைப் பறிமுதல் செய்ய வந்த  ஊழியர்கள், அப்பாஸை திட்டித் தாக்கியதால் ஏற்பட்ட அவமானத்தில், அவர் தீக்குளித்தார். பலத்த தீக்காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனையில் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அப்பாஸ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி