கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில இடங்களில் கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் ₹4,500 வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பஞ்சாப் பர்னாலாவில் சிலிண்டர் பதிவு செய்ய வரிசையில் நின்ற 60 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதை சுட்டிக்காட்டி மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சி விமர்சித்துள்ளது.