ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை

5624பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில், ஜாமீனில் வெளியே வந்தவர் இன்று (அக்.10) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவக்குறிச்சியைச் சேர்ந்த சிவசூரியன் என்பவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது சகோதரர் சின்னதுரை என்பவருடன் பைக்கில் சென்றபோது காரில் வந்து மோதிய கும்பல், பைக்கில் இருந்து கீழே விழுந்தவர்களை விரட்டி விரட்டி வெட்டியது. கடந்த ஜூலை மாதம் பைனான்சியர் கந்தையா என்பவரை சிவசூரியன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி