பொங்கல் தினத்தை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. சீறி பாயும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். அந்த வகையில், தனது காளையை அவிழ்த்துவிட்ட உரிமையாளர் ஒருவர், காளை வெற்றிப் பெற்ற கொண்டாட்டத்தில், தவெக கொடியை காட்டியபடி உற்சாகமாக ஓடினார். இது தவெகவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், விழா கமிட்டி இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.