அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்பவர் செய்யாத ஒரு கொலைக்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும், அமெரிக்க அதிகாரிகள் அவரை நாடு கடத்துவதற்காக மீண்டும் சிறைபிடித்தனர். சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளரான சுப்ரமணியம் வேதம் உடனடியாக நீதிமன்றத்தை நாடியதையடுத்து, அவரை நாடு கடத்தும் நடவடிக்கையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.