சிறுவனை நரபலி கொடுத்தவருக்கு மரண தண்டனை விதிப்பு

26பார்த்தது
சிறுவனை நரபலி கொடுத்தவருக்கு மரண தண்டனை விதிப்பு
உத்தரப்பிரதேசம் பஹ்ரைச் மாவட்டத்தில் 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மகன் குணமடைய மாந்திரீகன் கூறிய ஆலோசனையின்படி, அனூப் குமார் வர்மா 2023 மார்சில் உறவினர் மகன் விவேக் வர்மாவை கடத்தி கொன்றார். வழக்கின் கொடூரத்தன்மையை கருத்தில் கொண்டு, நீதிபதி சுனில் பிரசாத் மரண தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

தொடர்புடைய செய்தி